சென்னை: நடிகர் ரஜனிகாந்தையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டாமென நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.கமலஹாசன்திரிஷா ஜோடியாக நடித்துள்ள "மன்மதன் அம்பு' படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தைப் பற்றிய அறிமுகக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.அப்போது கமலஹாசன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
கேள்வி: 56 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கிறீர்களே, தங்கபஸ்பம் சாப்பிடுகிறீர்களா? பதில்: வயதைப் பற்றிப் பேசக்கூடாது. இளமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலே இளமைதான். எல்லோரும் மூன்று வேளை சாப்பிடுவது மாதிரி நானும் மூன்று வேளை சாப்பிடுகிறேன். தங்கபஸ்பம் எதுவும் சாப்பிடுவதில்லை. தங்கபஸ்பம் சாப்பிடுகிற அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தால் அதையும் சினிமாவிலேயே போட்டு இருப்பேன்.கேள்வி: ரஜனிகாந்த், ஷங்கர் டைரக்ஷனில் "எந்திரன்' என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்தார். அதேபோல் நீங்களும் அப்படி ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிப்பீர்களா?
பதில்: நான் யாரையும் "காப்பி' அடிப்பதில்லை. எனக்கென்று தனித்துவம் இருக்கிறது. நடிப்பில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டால் என் குரு சிவாஜியைத்தான் நினைப்பேன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. என்னையும் ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். எங்களை நாங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை என்றும் சேர்ந்து நடிப்பதில்லை என்றும் பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துகொண்டோம். "தசாவதாரம்' பெரிய பட்ஜெட் படம்தான். அதேபோல் "மன்மதன் அம்பு' படமும் பெரிய பட்ஜெட் படம்தான்.
கேள்வி: "மன்மதன் அம்பு' படத்தின் படப்பிடிப்பைக் குறிப்பாக ஒரு சொகுசு கப்பலில் நடத்தியது ஏன்?பதில்: "மன்மதன் அம்பு' படத்தின் கதை, உல்லாசப் பயணம் சம்பந்தப்பட்டது. அதில் நான் முன்னாள் கமாண்டேõவாக நடிக்கிறேன். அந்தப் படத்தின் கதைப்படி கப்பல் தேவைப்பட்டது.கேள்வி: மாதவன் உங்கள் படங்களில் தொடர்ந்து நடிப்பது ஏன்?பதில்: மாதவனுக்கும் எனக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதால்தான்...கேள்வி: சினிமாவுக்கு ஒத்திகை அவசியமா?
பதில்: 5 இலட்சம் செலவில் நடைபெறும் நாடகத்துக்கே ஒத்திகை தேவைப்படும்போது, 50 கோடி செலவில் தயாரிக்கும் சினிமாவுக்கும் ஒத்திகை அவசியம் இல்லையா? சினிமாவுக்கும் ஒத்திகை பார்ப்பது என் கண்டுபிடிப்பு அல்ல. மார்டன் தியேட்டர்ஸ் காலத்திலேயே ஒத்திகை இருந்தது. ஒத்திகை பார்ப்பதற்கு என்றே அந்த ஸ்டூடியோவில், மிகப்பெரிய "ஹால்' இருந்தது.
கேள்வி: இனிமேல் கமலஹாசன் எழுதும் கதைகளில்தான் கமலஹாசன் நடிப்பாரா?பதில்: "நல்ல கதை யார் எழுதினாலும் அதில் நான் நடிப்பேன். உங்களிடம் நல்ல கதை இருந்தால் நான் நடிக்கத் தயார்' எனத் தெரிவித்துள்ளார்.தினத்தந்தி
No comments:
Post a Comment